Tuesday, December 30, 2014

ARANIPALAIYAM - ஆரணிப்பாளையம்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.67917, 79.2945)ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click ARANIPALAIYAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  ஆரணிப்பாளையம் கிளிக் செய்யவும் (தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-



Tindivanam → Vandavasi → Arni → Aranipalaiyam = 78 kms.



Kanchipuram → Arcot → Arani → Aranipalaiyam = 72 kms.



Vellore  → Arni → Aranipalaiyam = 31 kms.



Villupuram → Gingee → Chetpet → Arni → Aranipalaiyam = 93 kms.



Tiruvannamalai  → Polur → Arni → Aranipalaiyam = 60 kms.


Vandavasi → Arni → Aranipalaiyam = 44 kms.



செல்வழி:-



திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → ஆரணிப்பாளையம் = 78 கி.மீ.



காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → ஆரணிப்பாளையம் = 72 கி.மீ.



வேலூர் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 31 கி.மீ.



விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 93 கி.மீ.



திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → ஆரணிப்பாளையம் = 60 கி.மீ.


வந்தவாசி → ஆரணி → ஆரணிப்பாளையம் = 44 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Aranipalaiyam is a part area of Arani town. There is an ancient temple in the Dharmaraja Street but the huge one is in degenerated and depreciated condition. So the natives had been decided to construct a new Jinalaya in less maintenance in the same lane. But it has all essential aspects of Jain temples.

Inside the sanctum Shri Adhinathar, rectangular granite plate carving with all features of Jinar, was established on a plinth. The fine polished statue has a beautiful viman on the top. The viman has four thirthankars, in the sitting posture, seated on each direction and also shikhara with kalash on the peak. ....


ஆரணி நகரின் பாளையம் என்ற பகுதியில் தர்மராஜா தெருவில் ஒரு பழமையான ஜிநாலயம் உள்ளது. அவ்வாலயம் பல ஆண்டுளாய் தேய்ந்தும்சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் அங்குள்ள சமண குடும்பத்தினர்கள்கச்சிதமான அளவில் அனைத்து அம்சங்களுடன்,  புதிய ஜிநாலயம் ஒன்றை அதே தெருவில் கட்டியுள்ளனர்.

அதன் கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் நீள்சதுர கருங்கல்லில் சமவ சரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் அழகான சிறிய விமானம் நான்கு திசைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் சிகர கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ...



Next to sanctum, metal idols of Thirthankars, Yaksha, Yakshi are arranged on a platform along the passage. In the front porch have two curved box structure with Shri Brahmadevar and Shri Kooshmandini, stone idols are established. The whole block is secured tightly by iron grills.

And a separate shrine was constructed for Shri Padmavathy in the open corridor. An altar is also in the corridor. North entranceway was attached with alround wall.
The compact and nice Jinalaya was well maintained and all the Jain poojas and rituals are conducted in the appropriate times. 


Contact No. Shri Nagaraj  -  +91 9442424001

=========

கருவறைக்கு அடுத்துள்ள வழிநடையில் உள்ள மேடையில் உலோகச் சிலைகளான தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகள் அனைத்தும் அமர்த்தப்பட்டுள்ளனர். முன் மண்டபத்தில் இரு வளைவு மாடங்கள் அமைத்து அதனுள் ஸ்ரீபிரம்மதேவர் மற்றும் ஸ்ரீதர்மதேவியின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.  அவை அனைத்தும் இரும்புக் கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலய திருச்சுற்றில் ஸ்ரீபத்மாவதி அம்மன் சன்னதி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பலிபீடத்துடன் உள்ள திருச்சுற்று வடதிசை நோக்கிய நுழைவு வாயிலும் சுற்றுச் சுவருடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அவ்வழகிய ஜிநாலயத்தில் சமணர்களின் அனைத்து பூஜைகளும், விழாக்களும் அந்தந்த வேளைகளில் நடைபெற்று வருகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001

No comments:

Post a Comment