Sunday, December 14, 2014

KAPPALUR - காப்பலூர்


Shri KUNDHU NATHAR  JAIN TEMPLE-  ஸ்ரீ குந்துநாதர் ஜிநாலயம்



Location:

KAPPALUR  lies on the Google map in the coordination of (12.4535, 79.09881) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click KAPPALUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  காப்பலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → Polur →  Kappalur = 86 kms.

chetpet → Polur → Tiruvannamalai road → Kappalur = 34 kms.

Arni →  Polur  → Tiruvannamalai road →  Kappalur = 35 kms.

Villupuram → Gingee → Chetpet →  Polur → Tiruvannamalai road → Kappalur = 91 kms.

Tiruvannamalai  → Polur road → Kappalur = 29 kms.


Vandavasi → Chetpet → Polur → Tiruvannamalai road →  Kappalur = 64 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → காப்பலூர் = 86 கி.மீ.

சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → காப்பலூர் = 34 கி.மீ.

ஆரணி → போளூர் சாலை → தி. மலை சாலை → காப்பலூர் = 35 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → காப்பலூர் = 91 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் சாலை  → காப்பலூர் = 29 கி.மீ.

வந்தவாசி →  சேத்பட் →  போளூர் → தி. மலை சாலை → காப்பலூர் = 64 கி.மீ.



 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


 ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து உக்ர வம்சத்து சூரசேன மஹாராஜாவிற்கும், ஸ்ரீகாந்த மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 35 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 95 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், மேஷ (ஆடு) லாஞ்சனத்தை உடையவரும், கந்தர்வ யக்ஷ்ன், ஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 35 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் வைசாக சுக்ல ப்ரதிபன்னத்தில் 96 கோடி 32 லட்சத்து 96 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஞானதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீகுந்துநாத  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 




One more Jinalaya Village in Tiruvannamalai district called as Kappalur, 9 kms travelling in the Tiruvannamalai - Polur road and 3 kms diversion towards west. However Jains has been living many centuries in the village, they built a Jinalya in the last century itself, dedicate to Shri Kundhunathar. But it has old monumental icon which is a stone idol of Jinar, aged 1000 years old, taken from Kasthambadi near Tiruvannamalai town.

The temple consists of two chambers. One is Garbagriha, it has Shri Kunthunathar white marble statue (absolutely incised) inside a beautiful four pillar Viman on a Plinth. Along this three white marble idols of Shri Adhinathar, Shri Parswanathar and Shri Mahaveerar and also some metal icons of Thirthankars, Yaksha, Yakshi and Nandheeawara dheep model on simple platform. It was crowned by simple Viman having four Jinars sitting on a lotus for each direction.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜிநாலய கிராமங்களில் ஒன்று காப்பலூர் என்னும் சிற்றூர்.  திருவண்ணாமலை - போளூர் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு நோக்கிய சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பல நூற்றாண்டுகளாய் சமணர்கள் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்திருந்தாலும்  சென்ற நூற்றாண்டில் ஒரு ஜிநாலயத்தை ஸ்ரீகுந்து நாத தீர்த்தங்கரருக்காக அர்ப்பணித்தனர். ஆனாலும் அவ்வாலயத்தில் ஆயிரம் ஆண்டுகால பழமையான ஒரு தீர்த்தங்கரரின் கற்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இருகட்டமைப்புகளை கொண்டுள்ள அவ்வாலயத்தின் ஒன்று கர்ப்பக்கிருஹமாக உள்ளது. அதில் ஸ்ரீகுந்து நாதரின் வெள்ளை பளிங்கு சிலை நான்கு கால் விமானத்தின் வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது.  அதன் அருகில் உள்ள மேடையில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீமகாவீரர் வெண்பளிங்கு சிலைகளும் மேலும் சில தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷி மற்றும் நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் போன்ற உலோக பிம்பங்களும் அலங்கரிக்கின்றன.  அதன் மேல் ஒரு எளிய விமானம்நான்கு திசைகளிலும் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் உள்ள ஜினரின்  உருவங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 



Another chamber used as worshipping consists of two plinths, one on east side has Old Jinar stone bas-relief of 1000 years old icon, beautiful carving has eight features of samavasaran Jinar but degenerated face. Another one on west side has Shri Padmavathy Devi statue, inside a marvelous four pillar viman.

The main entranceway and surrounded compound wall are safe guard the temple. In the corridor Dwajasthamp, altar and brick work made Manasthamp consists of four Jinars for each direction at the bottom and same as on the top viman are there.

All Poojas and religious rituals are conducted regularly at the appropriate time. Our visit will increase the glory of the temple. 


அடுத்துள்ள மண்டபப்பகுதியில் ஒருபுறம் தீர்த்தங்கரர் சிலை கருங்கல் பலகையில் சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டு  தனி மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அழகான அச்சிலை  திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கஸ்தாம்பாடி என்ற ஸ்தலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து தற்போது அழிந்து போன ஒரு ஜிநாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. மறுபுறம் உள்ள மேடையில் ஸ்ரீபத்மாவதி தேவியின் கற்சிலை ஐந்து தலை நாகத்துடன் வடிக்கப்பட்டுஅழகிய நாலுகால் விமானத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நுழைவுவாயில் மதிற்சுவருடன் பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயத்தின் திருச்சுற்றில் துவஜஸ்தம்பம்பலிபீடம் மற்றும் மனத்தூய்மைக் கம்பம்,  நாற்திசைகளிலும் தீர்த்தங்கரர் சிமெண்ட் சிலைகள் அடிப்பகுதியிலும்மேற்பகுதியில் உள்ள விமானத்திலும் வைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

சமண ஆலயங்களில் உள்ள அனைத்து பூஜைகளும்பண்டிகைகளும் இவ்வாலயத்திலும் செவ்வனே நடைபெற்று வருகிறது. எனினும் அவ்வாயலத்திற்கு விஜயம் செய்வதால் அவ்வாலயத்தின் பெருமை உயரும். 



No comments:

Post a Comment