Sunday, December 7, 2014

OTHALAVADY - ஓதலவாடி


Shri ADHINATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 





Location lies on the map in the coordination of (12.54798, 79.24764)ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click OTHALAVADY
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  ஓதலவாடி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → Polur road → Devikapuram → Othalavady = 71 kms.

chetpet → Polur road → Devikapuram → Othalavady = 19 kms.

Arni → Devikapuram road → thatchur → Othalavady = 18 kms.

Villupuram → Gingee → Chetpet → Polur road →Devikapuram → Othalavady = 85 kms.

Tiruvannamalai  → Polur  → Chetpet road → Devikapuram → Othalavady = 55 kms. 

Vandavasi → Chetpet → Polur road → Devikapuram → Othalavady = 48 kms. 


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 71 கி.மீ.

சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 19 கி.மீ.

ஆரணி → தேவிகாபுரம் சாலை   → தச்சூர் → ஓதலவாடி = 18 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 85 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → சேத்பட் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 55 கி.மீ.

வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை →  தேவிகாபுரம் → ஓதலவாடி = 48 கி.மீ.









 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

---------


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகருக்கும் தேவிகாபுரத்திற்கும் இடையே உள்ள கிராமம் ஓதலவாடியாகும். முற்காலத்தில் பல சான்றோர்கள் மற்றும் ஓலைச்சுவடி எழுத்தர்கள் அதிகம் வாழ்ந்துள்ளதால் ஓலைப்பாடி என்றும், 13ம் நூற்றாண்டில் ஆண்ட சோழ அரசன் ஓதலன் அங்குள்ள ஜிநாலயத்திற்கு உதவியளித்து வந்ததால் ஓதலவாடி என்றும் அழைக்கப்பட்டது. அவ்வாலய மூலவரான ஸ்ரீஆதிநாதரை அணியாத அழகர் என்றும் அவ்வரசன் போற்றிபாடி யுள்ளார்.

ஜிநாலயம் தோன்றுவதற்கு முன்னரே பல சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள ஊருக்கு சென்று வழிபாடு செய்து வந்த சிரமத்தை குறைப்பதற்காக தனியாலயம் ஒன்று அவ்வூரில் நிர்மாணித்துள்ளனர். அவ்வாலயத்திற்கு 13ம் நூற்றாண்டின் சோழப்பேரரசனிடம் வரி விலக்கு வாங்கியதோடு பொருளுதவியும் பெற்றதற்கான சான்றுகள் கல்வெட்டாக அந்த ஜிநாலயத்தின் விமானத்தின் அடியில் உள்ளது.



Othalavady, a small village situated between Arni and Devikapuram in Tiruvannamalai dist. Many scholars and palm-leave writers are living in the holy-place in the olden times. And also a Jinalaya was patronized by the King Othalan, chola in the 13th Century AD. So the place is called as Othalavady. He praised the Main deity thro’ poems as Aniyatha Azhagar (ie he looked more handsome in nirvana(without dress) state).   

More jains were lived in olden days. They built a Jinalaya for their worshipping purpose during the time. Then the Jinalaya got tax-free site category and also some assistances from the ruler of the then period. Subsequently it was patronized by the Chola king also in the 13th Century AD. It was renowned by a stone inscription laid at the bottom of the Viman.


கிழக்கு நோக்கிய நுழைவாயில் கொண்டுள்ள அவ்வாலயத்தின் மதிற்சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பகிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் மற்றும் முகமண்டபம் போன்ற திராவிட பாரம்பரிய அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீஆதிநாதரின் கற்சிலை மூலவராக வேதிகையில் அமர்ந்துள்ளது. கருங்கற் பலகையில் மூலவரின் உருவம் பீடத்துடன் சற்று புடைப்புடனும், முக்குடை, சாமரைதாரிகளுடன் செதுக்கப்பட்டுள்ள அழகிய வடிவம் ஆகும். அதன் மேற்பகுதி துவிதள விமானத்துடன் சிகர கலசங்களுடன் காட்சியளிக்கிறது. மேற்தளத்தில் தீர்த்தங்கரரின் உருவங்கள் நின்ற நிலையிலும், கீழ்தளத்தில் அமர்ந்த நிலையிலும் நாற்திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓர்சிரம் ஈருடல் வடிவத்தில் சிங்கங்கள் மேற்தள நான்கு மூலையிலும், எருது உருவம் அதே போன்று கீழ்தள நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

The Jinalaya consists of Garbahgriha, Arthamandap, Mahamandap and Mugamandap in the vedi-block. An entranceway is attached with surrounded wall for the open corridor.

A stone plate carving of Shri Adhinathar with Mukkudai and whisky maids is seated on the vedi-platform. The figure of god and pedestal are in protrude incision, is unique. All features are etched beautifully on the idol. The sanctum is crowned by two stages Viman with Shikara and Kalash on lotus. Four thirthankar brick mortar idols are erected on each direction and one head with twin bodied statue of lion also seated at the corner. At the bottom stage four thirthankar idols in sitting posture and single headed and dual-body statue of bull at the corner. 




அர்த்த மண்டபத்தின் மைய மேடையில் தினபூஜைக்கான உலோகத்தினால் ஆன ஸ்ரீஆதிநாதரின் சிலையும், அவ்வப்போது வரும் பண்டிகைகள், விசேஷ பூஜைக்கான பிம்பங்களும் அமர்த்தப்பட்டுள்ளன.  இருபுறமும் உள்ள மேடைகளில் பல உலோக தெய்வ உருவங்கள் அலங்கரிக்கின்றன. முக்கியமான தீர்த்தங்கரர்களும், நந்தீஸ்வர தீபமாதிரி வடிவம், சுருதஸ்கந்தம், நவதேவதா மற்றும் யக்ஷ, யக்ஷிகளும், மேலும் இரு கற்சிலைகளான 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதாவும் அதில் அடங்கும். அனைத்தும் பாதுகாப்பான கதவுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. 

ஆலய திருச்சுற்றின் தென்மேற்கில் ஸ்ரீபிரம்மதேவர் தனது  ஸ்ரீபூர்ண, ஸ்ரீபுஷ்கலா  தேவியருடன் தனி யாலயமாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல் வடமேற்கு மூலையில் ஸ்ரீபத்மாவதி தேவியரின் சிற்றாலயமும் அழகாக அதே அளவில் விமான கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஸ்ரீநவதேவதைக்கான தனி மேடையுடன் ஒரு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது தனித்துவம் வாய்ந்தது. மேலும் முகமண்டபத்தில் பலிபீடமும் வைக்கப்பட்டுள்ளது.

சமண ஆலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் மற்றும் திருவிழா, பண்டிகைகளும் செவ்வனே நடந்து வருகின்றது. 

தொடர்புக்கு: அப்பாசாமி நைனார் - +91 9677399024



The Arthamandap pavilion has three platforms. One at centre comprises the daily ritual metal made idol of Shri Adhinathar and other seasonal pantheons. On either side metal made pantheons of Thirthangars, Navadevatha, Nandheeswaradweep, Shruthaskandam and important Yaksh & Yakshies; and also two stone made 24 thirthankars cluster and Navadevatha are arranged orderly. All are secured tightly by iron grill-doors. A Mahamandap is bifurgated in the fore, as Muhamandap porch.
A separate small temple for Shri Brahmadevar with twin devis of Shri Poorna and Shri Pushkala in the south-west corner and at the north-west Shri Padmavathy temple also constructed, in the same size, with viman and Kalash. At the north-east of open corridor a shrine for Navadevatha was constructed uniquely. An altar also placed in the fore-porch.

All poojas and rituals like, daily pooja, quartly conducted Nandheeswara pooja, annual ceremonies of Mukkudai, Navarathiri and Jain important festivals are celebrated recurrently. 

Contact No. Shri Appasamy nainar +91 9677399024


No comments:

Post a Comment