Tuesday, December 9, 2014

SATHUPERIPALAYAM - சதுப்பேரிபாளையம்


Shri ADHINATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 





Location lies on the map in the coordination of (12.57902, 79.24206)ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click SATHUPERIPALAYAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சதுப்பேரிபாளையம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → vinnamangalam →  Sathuperipalaiyam = 77 kms.

chetpet → vinnamangalam →  Sathuperipalaiyam = 25 kms.

Arni → Devikapuram road → Thatchur samathuvapuram →  Sathuperipalaiyam = 12 kms.

Villupuram → Gingee → Chetpet → → vinnamangalam →  Sathuperipalaiyam = 91 kms.

Tiruvannamalai  → Polur  → Arni road → Vadamathimangalam → Sathuperipalayam = 55 kms. 

Vandavasi → Arni → Devikapuram road → Thatchur samathuvapuram →  Sathuperipalaiyam = 57 kms.

செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 77 கி.மீ.

சேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 25 கி.மீ.

ஆரணி → தேவிகாபுரம் சாலை   → தச்சூர் சமத்துவபுரம் → சதுப்பேரிபாளையம் = 12 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 91 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி  சாலை → வடமாதிமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 55 கி.மீ.


வந்தவாசி →ஆரணி → தேவிகாபுரம் சாலை   → தச்சூர் சமத்துவபுரம் → சதுப்பேரிபாளையம் = 57 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






Sathuperipalayam, a jains importance place, situated between Arani-Devikapuram road near Thatchur village, about 8 kms from Arani town. Very old medium size Jinalaya, now in deteriorate state. Only odd Jain families are living in the small village. However they are meager in number, they conduct the daily pooja and other rituals regularly. It is the high time to renovate the Jinalayam near future.


சமணர்களின் ஜிநாலயங்களில் ஒன்று சதுப்பேரிபாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி யிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தேவிகாபுரம் சாலையில் அவ்வூர் அமைந்துள்ளது. மிகவும் புராதனமான அந்நினைவுச்சின்னம் தற்போது சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிகவும் சொற்பமான சமணர்கள் வாழ்ந்தாலும் அனைத்து பூஜைகளும் மத சடங்குகளும் நடந்து வருகிறது. குறைந்த சிரமத்தில் சீரமைப்பு பணிகளைச் செய்ய இதுவே சரியான தருணம் ஆகும்.




மற்ற ஜிநாலயங்களைப் போன்றே, கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மகா,முகமண்டபங்கள்  போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. ஆலயநுழைவாயில் சுற்றுச்சுவருடன் இணைந்து கட்டப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.(ஆனால் திருச்சுற்றில் முட்புதர்களும், நெருஞ்சி செடிகளும் நிரம்பியுள்ளன.) 

பல நூற்றாண்டுகளாக அவ்வாலயம் சமயப் புரவலர்கள் மற்றும் மன்னர்களின் ஆதரவிலும் இருந்துள்ளதை அதன் கட்டமைப்பு தெரிவிக்கின்றது. அங்கு பல முனிவர்கள் வாசம் செய்தது ஆலய உற்சவ மண்டபத்தில் உள்ள முனிவாச அறையினால் தெரிகிறது. மூலவர் வேதிகையில் உள்ள ஸ்ரீஆதிநாதரின் உருவம், கருங்கல் பலகையில் எட்டு அம்சங்களைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ள கலைப்பாணி நானூறு ஆண்டுகளைக் கடந்த சிற்பக்கலையை காட்டுகிறது. அதன் மேல் உள்ள துவிதள விமானம் பழைய கலை அம்சங்களுடன் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகள் மற்றும் யக்ஷ, யக்ஷியர்கள் உருவங்களுடன் காட்சியளிக்கிறது.



It has Garbagriha, Arthamandap, Maga/Muga mandap pavilions like traditional Jinalayas. Manasthamp on the road was accidently demolished few months back. The entrance, an opening in the porch, attached with enclosure of wall structure around. (Open corridor dumped with thorn-bushes and long prickle grass.)

The Jinalaya might be five hundred years old; patroned by more peoples and had assistances from the then ruler’s. Munis had been lived in the Jinalayam in the Muni-vasam (saint-dwell) in olden times. The Moolavar Shri Adinathar idol, stone plate carving with eight features are ornamented on the back, might be four hundred years made sculpture, is on the vedi-dias. It has a Viman with Shikara and Kalash. The two-tier Viman consists of Thirthankar mortar statues in the sitting posture and few Yaksh, Yakshies on each direction.




அர்த்தமண்டப நடுமேடையில் தினபூஜைக்கான ஆதிநாதர் சிலையும், இருபுற மேடைகளில் உலோச் சிலைகளுடன் 24 தீர்த்தங்கரர்கள் மற்றும் இரு நவதேவதை கற்சிற்பங்களும், சதுர்முகியும் அமர்த்தப்பட்டுள்ளன. மேலும் யானைமீது அமர்ந்த கோலத்தில் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளது.  அனைத்தும் குறுக்கே சுவற்றுடன் கணமான கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபம் மற்றும் முகமண்டபமும் அதனுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள கற்தூண்களில் தீர்த்தங்கரர் உருவங்கள், யக்ஷன், அன்னம், சிங்கம், கலசம் போன்ற லாஞ்சன வடிவங்களும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் பலிபீடம் திருச்சுற்றில் நிறுவப்பட்டுள்ளது.

அனைத்து சமணர் ஆலயங்களில் நடைபெறும் தினபூஜை, விசேஷபூஜை போன்றவைகள் இவ்வாலயத்திலும் செவ்வனே நடந்து வருகின்றது. 

அனைவரும் ஆண்டிற்கு இருமுறையேனும் அவ்வாலயம் சென்று வந்தால் அதனை அழிவிலிருந்து காப்பாற்ற ஏதுவாக அமையும்.

தொடர்புக்கு: ஸ்ரீஜினாநந்தன் - +91 9600382017


Arthamandap comprise of platforms of daily pooja idols along with metal alloy statues. Two stone made Navadevathas and 24 thirthankars cluster also included. Shri Brahmadevar on an elephant, stone statue, is on a separate structure. All are secured tightly by twin-doors on the partition wall.

Medium size Mahamandap pavilion and a Mugamandap porch were annexed in the temple structure. The fore-porch has many pillars with incision of Thirthankars, swan, lion and Kalash as bas-relief. An altar was laid in fore on the open corridor.

All Poojas and rituals of the religion are conducted regularly in the Jinalaya. 

At least one visit bi-annually can save the temple in further deterioration.

 Contact No. Mr. Jinanandhan  +91 9600382017


No comments:

Post a Comment